மாணவர்களுக்கு வீடு தேடி பள்ளி – தமிழக அரசு அதிரடி!

சென்னை (30 செப் 2021)::  வீடு தேடி பள்ளிகள் என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. கற்றல் இடைவெளியைப் போக்க எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களுக்கு, பாடம் ஆசிரியர்கள்வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் அதன்படி, ஒவ்வொரு ஆசிரியரும், தங்களது பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களின் பகுதிக்கு சென்று, அங்குள்ள மாணாக்கர்களை ஒருங்கிணைத்து, தினசரி 2 மணி நேரம் பாடங்கள்…

மேலும்...

சவூதி அரேபியாவில் ஊதியமின்றி சிக்கித் தவித்த தமிழர்கள் நாடு திரும்பினர்!

ரியாத் (29 ஆக 2021): சவுதி அரேபியாவின் அல்-ஹஸாவில் மூன்று வருடங்கள் ஊதியமின்றி சிக்கித் தவித்த தமிழர்கள் இருவர் நாடு திரும்பினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஜெயசேகரன் பிரான்சிஸ், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொத்தனார் வேலைக்காக சவூதி அரேபியா அல்ஹஸ்ஸாவுக்கு சென்றனர். முதல் ஆண்டு சம்பளம் சரியாக வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் அது நிறுத்தப்பட்டது. சம்பளம் வழங்கப்படாததற்காக தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் வேறொரு போலியான வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஒரு சமூக…

மேலும்...

அதெல்லாம் வேண்டாம் – எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை (27 ஆக 2021): புகழ்ந்து பேசுவதை தவிற்க வேண்டி முதல்வர் ஸ்டாலின் எம்.எல்.ஏக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் தங்கள் உரையை ஆரம்பிக்கும் முன்பு அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த…

மேலும்...

அனைவரையும் சிலிர்க்க வைத்த மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏவின் கோரிக்கை!

சென்னை (27 ஆக 2021): பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நேற்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது வைத்த கோரிக்கை அனவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழக அரசு பல காலமாக மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல இலவச திட்டங்களை வகுத்து செயல்படுத்தியும் வருகின்றன. இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சி மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் வைத்த கோரிக்கை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அவர்…

மேலும்...

தமிழகத்தில் இன்று முதல் பெட்ரோல் விலை குறைப்பு!

சென்னை (14 ஆக 2021): தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்ட நிலையில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னையில்…

மேலும்...

அதிமுக முன்னாள் அமைச்சர் வீடு உட்பட 55 இடங்களில் அதிரடி ரெய்டு!

சென்னை (10 ஆக 2021): அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு உட்பட 55 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அதிமுக உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, அரசு ஒப்பந்தப் பணிகள் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.2 கோடி மோசடி செய்துவிட்டதாக எஸ்.பி.வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கோவை, குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில்…

மேலும்...

நள்ளிரவில் கூடும் தமிழக சட்டப்பேரவை!

சென்னை (09 ஆக 2021): சுதந்திர தினத்தன்று நள்ளிரவில் சட்டப்பேரவையில் சுதந்திர தின கொண்டாட்டம் நடத்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் தமிழ்நாடு அரசின் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார் மு.க. ஸ்டாலின். அவரது உரையில் பல முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், சுதந்திரத் தினத்தின் 75வது ஆண்டு என்பதால், ஆகஸ்ட் 15ஆம்…

மேலும்...

தமிழகம் முழுவதும் கோவில்களில் தரிசனத்திற்கு தடை!

சென்னை (01 ஆக 2021): தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். கொரோனா 3 ஆம் அலை பரவல் அச்சம் இருப்பதால், தொடக்கத்திலேயே அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவித்துள்ளது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு…

மேலும்...

தமிழக கர்நாடக பாஜக-வினர் இடையே நடைபெறும் உச்சபட்ச காமெடி!

பெங்களூரு (31 ஜூலை 2021): கர்நாடகா பாஜக திட்டத்தை தமிழக பாஜகவினர் எதிர்ப்பதும், மத்தியில் ஆளும் பாஜக அதை பார்த்து கொண்டிருப்பதும் பெரிய நகைச்சுவை என்று அரசியல் ஆர்வலர்கள் கிண்டல் அடிக்கின்றனர். கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்ட நிலையில், மேகதாது அணையை குறித்து சபதம் எடுத்துக் கொண்ட விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கர்நாடக முதல்வரின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேகதாது அணையைக் கட்ட கர்நாடகா…

மேலும்...

பாஜக அரசை எதிர்த்து பாஜக போராட்டம்!

சென்னை (29 ஜூலை 2021): கர்நாடக பாஜக அரசை எதிர்த்து, தமிழக பாஜக போராட்டம் அறிவித்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தஞ்சாவூரில் வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும்...