கோவில் வாசலில் நடந்த கொடூர கொலை!

வேலூர் (08 பிப் 2020): வேலூர் அருகே கோவில் வாசலில் நடந்த கொடூர கொலை பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கொசப்பேட்டை திருப்பூர் குமரன் தெருவில் வசித்து வந்தவர் கட்டிட மேஸ்திரி குட்டி (எ) குமரவேல்(48). இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இவர் கொசப்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோவில்க்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்துள்ளார். வெள்ளிக்கிழமை என்பதால் நூற்றுக்கணக்கான பெண்கள் கோவிலுக்கு வந்து சென்றபடி இருந்துள்ளனர். பிப்ரவரி 7 ந்தேதி இரவு…

மேலும்...

திருப்பதி கோவிலில் பக்தர்கள் பலமணிநேரம் காத்திருந்து தரிசனம்!

திருமலை (19 ஜன 2020): திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாதாரண நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், முக்கிய உற்சவ நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் வருகின்றனர்.இந்நிலையில், விடுமுறை நாட்கள் என்பதால் ஏழுமலையான் கோயிலில் நேற்று 74 ஆயிரத்து 548 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில், இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி டிபிசி பாலம்…

மேலும்...

ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்படுவது உண்மையா? – கோவில் நிர்வாகி விளக்கம்!

மும்பை (18 ஜன 2020): ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறையின்றி மூட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்களை வதந்தி எனக் கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது. ஷீரடி சாயிபாபா பிறந்த இடம் பர்பனி மாவட்டம் பத்ரி என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவிலை மூடப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே, ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்படமாட்டாது என்று தெளிவுபடுத்த விரும்புவதாக சாயிபாபா கோவிலின் தலைமைச் செயல் அலுவலர் தீபக் முக்லிகர்…

மேலும்...

மகாராஷ்டிர அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு – ஷீரடி சாய்பாபா கோயிலை மூட முடிவு!

மும்பை (18 ஜன 2020): ஷீரடியிலுள்ள சாயிபாபா கோவிலை ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறையின்றி மூடுவதென்று கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் அகமதுநகா் மாவட்டத்தில் சாயிபாபா வாழ்ந்து மறைந்த இடமான ஷீரடியில் அவருக்குக் கோவில் இருக்கிறது. இங்குள்ள சாயிபாபாவின் திருவுருவை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் தினந்தோறும் தரிசனம் செய்து வருகின்றனா். சாயிபாபா, தன் வாழ்நாளில் பெரும்பாலான தனது காலத்தைக் கழித்தது ஷீரடியில்தான். அவா் எங்கு பிறந்தாா் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. பா்பனி…

மேலும்...

குற்றாலம் திருக்குற்றால நாதர் சுவாமி கோயில் திருவிழா!

குற்றாலம் (10 ஜன 2020): தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றால நாதர் சுவாமி கோயில் திருவாதிரை திருவிழா ஜனவரி 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும் அருள்மிகு நடராஜர் திரு தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமையப்பெற்ற திருக்குற்றாலத்தில் அருள்மிகு நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் சிறப்பு மிக்கதுமான மார்கழி திருவாதிரை திருவிழா ஜனவரி ஒன்றாம் தேதியன்று விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் காலை மாலையில் சுவாமி…

மேலும்...

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் பரமபதவாசல் திறப்பு!

திருச்சி (06 ஜன 2020): திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் பரமபதவாசல் திறப்பு அதிகாலை நடைபெற்றது. விழாவில் நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுந்தமாகவும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 26–ந்தேதி தொடங்கியது. அதன் பின் பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய…

மேலும்...