கல்யாணராமன் மீது நடவடிக்கை – போலீஸில் புகார் அளித்த விசிக!

சென்னை (07 ஜூலை 2021): தொல். திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பி வரும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சென்னை கமிஷனர் ஆபீசில் விசிக சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. பாஜக கட்சியில் கல்யாணராமன் என்பவர், தொடர்ந்து வன்முறையைத் தூண்டி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசி, ஊடக வெளிச்சத்தில் எப்போதும் தன் பெயர் இருக்கும்படி சர்ச்சை செய்து வருபவர். சில மாதங்களுக்கு முன்பு, மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து தரக்குறைவாகப்…

மேலும்...

நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல – திருமாவளவன் விளக்கம்!

சென்னை (14 மார்ச் 2021): நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான கட்சி என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ‘இந்தியா டுடே’ செய்தி நிறுவனம் ‘தென்னிந்தியா 2021’ என்கிற பெயரில் அரசியல் கருத்தரங்கு நிகழ்வை நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “ஒரே நாடு; ஒரே கலாச்சாரம் என்பதே பா.ஜ.க-வுடைய தேசியவாதம். இந்த ஒற்றைக் கலாச்சார பிரச்சாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது. பன்மைத்துவத்திற்கு எதிரானது. நாங்கள் இந்துக்களுக்கு…

மேலும்...

பாஜக சார்பில் போராட வரவில்லை – குஷ்பூ விளக்கம்!

கேளம்பாக்கம் (27 அக் 2020): நான் பாஜக சார்பில் போராட வரவில்லை என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். . விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை எதிர்த்து போராட்டம் நடத்திய குஷ்பூ இன்று காலை கைது செய்யப்பட்டார் பின்பு மாலை விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப் பின்னர் கேளம்பாக்கத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; “தேர்தல் சமயத்தில் மட்டுமே சிலர் கோவில்களுக்கு செல்கின்றனர். பெண்களைப் பற்றி இழிவாக பேசியதால், திருமாவளவனுக்கு எதிராக போராட்டம்…

மேலும்...

நடிகை குஷ்பூ கைது!

சிதம்பரம் (27 அக் 2020): விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். இந்த நிலையில்,  தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் கைது செய்தனர். முட்டுக்காடு அருகே சுந்தரவதனம் எஸ்.பி தலைமையிலான போலீஸ், குஷ்புவை கைது செய்தது.

மேலும்...

பெண்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

சென்னை (24 அக் 2020): பெண்கள் எனது 40 நிமிட உரையை முழுமையாக கேட்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொல்.திருமாவளவன் சமீபத்தில் பேசிய நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பதாக பாஜகவை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த திருமாவளவன், தான் பேசியது திரித்து கூறப்பட்டிருப்பதாகவும், மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளதையே தான் குறிப்பிட்டு பேசியதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிற்படுத்தப்பட்ட மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்துவதும்…

மேலும்...

குடியரசுத் தலைவர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற விசாரணை தேவை – பகீர் கிளப்பும் திருமாவளவன்!

சென்னை (25 மே 2020): குடியரசுத் தலைவரை ராஜஸ்தான் கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தது குறித்து உச்ச நீதிமன்ற விசாரணை நடத்தப்படுமா? என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலின் உள்ளே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நுழையவிடாத காரணத்தால் அவர் கோவி லுக்கு வெளியே உள்ள படியில் அமர்ந்து குடும்பத்துடன் வழிபாடு செய்தார். அப்போது இவ்விவகாரம் ஜாதிய ரீதியிலான துன்புறுத்தல்…

மேலும்...

தமிழக பாஜக தலைவராக தலித்தை நியமித்தது ஏன்? – திருமாவளவன் பகீர் கேள்வி!

சென்னை (23 மே 2020): தமிழக பாஜக தலைவராக தலித் சமூகத்தை சேர்ந்த முருகனை நியமித்தது ஏன்? என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தலித் சமூக மக்களுக்காக போராடி வருவது அனைவரும் அறிந்ததே. சமீபகாலமாக திமுக தலைவர்கள் பேசும் சில பேச்சுக்கள் தலித் சமூகத்தினரின் மனம் நோகும்படி உள்ளது. இந்நிலையில்தான் தலித் சமூகத்தினரை இழிவாகப் பேசியதாக கூறி திமுக ஆர்.எஸ் பாரதி சனிக்கிழமை அன்று கைதாகி…

மேலும்...

அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா? – திருமாவளவன் கடும் கண்டனம்

சென்னை (23 மே 2020): திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி கைது செய்யப் பட்டிருப்பதற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களைத் திடுமென தமிழக அரசு கைது செய்திருக்கிறது. தலித் மக்களின் மீது மிகுந்த கரிசனம் இருப்பதைப் போலவும், தலித் மக்களை யார் சீண்டினாலும் இழிவு படுத்தினாலும் வேடிக்கைப் பார்க்க மாட்டோம்; கடுமையாக நடவடிக்கை எடுப்போம்…

மேலும்...

வழக்கத்திற்கு மாறாக ரம்ஜான் நோன்பில் திடீர் முடிவெடுத்த திருமாவளவன்!

சென்னை (20 மே 2020): ரம்ஜான் நோன்பில் வழக்கத்திற்கு மாறாக இவ்வருடம் மூன்று நோன்பை மட்டுமே கடை பிடிப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தனது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் 5 நோன்புகளை பிடிப்பார். ஆனால் இவ்வருடம் சில தவிர்கமுடியாத காரணங்களால் 3 நோன்பை மட்டுமே பிடிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் “16ஆவதுஆண்டாக நோன்பு நாளை தொடங்குகிறேன். வழக்கமாக 5 நாட்கள்…

மேலும்...

நீக்கப்படுவாரா தயாநிதி மாறன் – புயலை கிளப்பும் விவகாரம்!

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தலைமைச் செயலகத்தில் கிளப்பிய சலசலப்பு அலை இப்போதைக்கு ஓயாது போல! தயாநிதியைவிடவும் இதில் அதிகமாக சிக்கிக் கொண்டு, பழி சுமப்பவர் திருமாவளவன். திமுக.வுக்காக திருமாவளவன் பாரம் சுமப்பது இது முதல் முறையல்ல. 2009 ஈழ இறுதிப் போர் காலத்தில், அவர் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தது, கலைஞர் வற்புறுத்தலால் ராஜபக்‌ஷேவை சந்திக்கச் சென்ற குழுவில் இடம் பெற்றது, அதன் மூலமாக திமுக மீதான விமர்சனங்களுக்கு கேடயமாக தன்னை ஒப்படைத்தது,…

மேலும்...