மம்தா பக்கம் சாயும் பாஜக தலைவர்கள்!

கொல்கத்தா (11 ஜுன் 2021): பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய்திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த 67 வயதான முகுல் ராய், 1998 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் காங்கிரசில் இருந்து விலகிய அவர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். 1998 முதல் திரிணாமுல் காங்கிரசில் இருந்துவந்த முகுல் ராய் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், இவர் சில பாஜக தலைவர்களையும் சந்தித்தார். இதனால், 2015 ஆம் ஆண்டு…

மேலும்...

பாஜகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்க எதிர்ப்பு – ரகளையில் ஈடுபட்ட பாஜகவினர்!

கொல்கத்தா (20 மார்ச் 2021): மேற்குவங்கத்தில் புதிதாக பா.ஜ.க.வில் இணைந்தவர்களுக்‍கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்ததற்கு அக்‍கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்‍கும், பா.ஜ.க.வுக்‍கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 3-ம் முறையாக ஆட்சியை கைப்பற்ற செல்வி மம்தாவும், மம்தாவின் அரசை அகற்ற பா.ஜ.க.-வினரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், திரிணாமூல் காங்கிரசிலிருந்து அண்மையில் விலகி பா.ஜ.க.வில்…

மேலும்...

இந்திய ஊடகங்கள் மற்றும் நீதித்துறை மீதுமஹுவா மொய்த்ரா நேரடி பாய்ச்சல்!

புதுடெல்லி (09 பிப் 2021): திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் தனது வாதங்களை எழுப்பியுள்ளார் மஹுவா, . மத்திய அரசின் கொள்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற உரையில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயைக் குறித்து நேரடியாகவே விமர்சித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ”இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள துன்பங்களுக்கு காரணம் ஜனநாயகத்தின் தூண்களான ஊடகம் மற்றும் நீதித்துறையும்…

மேலும்...

மேற்கு வங்கத்தில் மம்தா அமைச்சரவையிலிருந்து மற்றும் ஒரு அமைச்சர் ராஜினாமா!

கொல்கத்தா (22 ஜன 2021): மேற்கு வங்க மம்தா தலைமையிலான அமைச்சரவையிலிருந்து வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளார். தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸிலிருந்து தொடர்ந்து பலர் விலகி வருவதால் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ராஜீப் பானர்ஜியும் பதவி விலகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ராஜீப் பானர்ஜி தனது மேற்கு வங்காள மக்களுக்கு சேவை செய்ய முடிந்ததில் பெருமை…

மேலும்...

முதலாக்கை ஒழித்த பாஜக என்னை விவாகரத்துக்கு தூண்டியுள்ளது – பாஜக எம்.பி. மனைவி அதிரடி!

முத்தலாக்கை ஒழித்ததாக சொல்லும் பாஜக என்னை விவாகரத்து செய்யுமாறு என் கணவரை வலியுறுத்துகிறது என்று பாஜக எம்.பி சௌமித்ரா மனைவி சுஜாதா தெரிவித்துள்ளார். பாஜக எம்.பி. சௌமித்ரா கானின் மனைவி சுஜாதா மண்டல் கான் பஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து, சுஜாதாவுக்கு சௌமித்ரா கான் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள சுஜாதா “தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியல் நுழைந்தால், அது உறவுகளுக்கு நல்லதல்ல. எனக்கு எதிராகத் தூண்டிவிடும் பாஜகவின் தவறான நபர்களுடன்…

மேலும்...

மேற்கு வங்கத்தில் அதிரடி திருப்பம் – திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்பி மனைவி!

கொல்கத்தா 921 டிச 2020): மேற்கு வங்க பாஜக எம்பி சவுமித்ரா கான் மனைவி சுஜாதா மொண்டல் கான் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். முன்னாள் ஆசிரியரான சுஜாதா கான் திரிணாமுல் காங்கிரசில் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறி பாஜகவை விட்டு வெளியேறினார். ‘எனக்கு ஆறுதல் தேவை, எனக்கு மரியாதை தேவை. நான் ஒரு திறமையான கட்சியின் திறமையான தலைவராக இருக்க விரும்புகிறேன். பாஜகவில் அது இல்லை. அதில் தவறான மற்றும் ஊழல் தலைவர்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்கள்….

மேலும்...

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைவதற்கு மத்திய அமைச்சர் எதிர்ப்பு

கொல்கத்தா (19 டிச 2020): மேற்கு வங்கத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக தனது அரசியல் சூழ்ச்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜகவில் இணைவதற்கு மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்றுள்ளார். அங்கு அவர் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுவேண்டு ஆதிகாரி பாஜகவில் இணைகிறார். திரிணாமுல் மூத்த தலைவர் சுவேந்து ஆதிகாரியைத் தவிர, மேலும் இரண்டு…

மேலும்...

பாஜக மம்தாவை கொலை செய்ய முயற்சி – அமைச்சர்கள் பகீர் குற்றச்சாட்டு!

கொல்கத்தா (13 டிச 2020): தேர்தலில் தோல்வியை சந்தித்தால் பாஜகவினர் மேற்கு வங்க முதல்வர் மம்தாவை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சுப்ரதா முகர்ஜி தெரிவித்துள்ளர். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் மேற்கு வங்காளத்தில் அமைதியை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. ஜே.பி.நட்டாவின் கார் மீது தாக்குதல் நடத்தியது பாஜக சதி என்றும் அது குறித்து விசாரிக்கப்படும் என்றும் சுப்ரதா முகர்ஜி கூறினார். கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக…

மேலும்...