ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலை மோடிக்கும் ஏற்படும் – மஹபூபா முஃப்தி!

புதுடெல்லி (10 நவ 2020): அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்ததைப் போல மோடி அரசுக்கும் விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று மஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி திங்களன்று பாஜகவை கடுமையாக சாடினார். பீகார் தேர்தல் கருத்துக் கணிப்புகள் என்.டி.ஏவின் தோல்வியை முன்னறிவிப்பதாக மெஹபூபாவின் பதில் இருந்தது. “அமெரிக்காவில் என்ன நடந்தது என்று பாருங்கள். டிரம்ப் போய்விட்டார். பாஜகவும் போகும்” என்று ஜம்முவில் பல்வேறு பிரிவுகளுடனான சந்திப்புக்குப் பிறகு மெஹபூபா முஃப்தி கூறினார்….

மேலும்...

இந்தியா அசுத்தமான நாடு – ட்ரம்ப் கடும் விமர்சனம் : பிரதமர் மோடி அமைதி!

வாஷிங்டன் (23 அக் 2020): இந்தியா அசுத்தமான நாடு என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். நவம்பர் 3 ம் தேதி அமெரிக்கர்கள் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய உள்ளனர். கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ள அமெரிக்கர்கள் வாக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இனவெறி மற்றும் போலீஸ் மிருகத்தனம் போன்ற முக்கிய பிரச்சினைகள் தவிர, அவ்வப்போது பல பிரச்சினைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

மேலும்...

அதிபர் ட்ரம்ப், அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் இடையே தரை லோக்கலில் நடந்த காரசார விவாதம்!

நியூயார்க் (30 செப் 2020): அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் இடையே தரை லோக்கலில் காரசாரமாக விவாதம் நடைபெற்றுள்ளது அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், ரிபப்ளிகன் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டெமாக்ட்ரடிக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் தேர்தலுக்கு முன் அதிபர் வேட்பாளர்கள் நேரடியாக விவாதம் செய்வது மரபு….

மேலும்...

வழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு!

வாஷிங்டன் (23 மே 2020): அமெரிக்காவில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் உடனடியாக திறக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆளுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. இதன்  பரவலை தடுக்கும் விதமாக அமெரிக்காவில் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. அதேவேளை அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், “அமெரிக்காவில் தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் மசூதிகளை உடனடியாக…

மேலும்...

கோபமடைந்த ட்ரம்ப் காரணம் இதுதான்!

வாஷிங்டன் (13 மே 2020): செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பை பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறினார். வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்பிடம், வெய்ஜியா ஜியாங் (Weijia Jiang) என்னும் செய்தியாளர், அமெரிக்காவில் அன்றாடம் உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும்போது உலகிலேயே அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் இங்கு தான் நடைபெறுகின்றன என்று பரிசோதனையில் மற்ற நாடுகளோடு போட்டி போடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எல்லா நாடுகளிலும்…

மேலும்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் பல்டி!

வாஷிங்டன் (09 ஏப் 2020): இந்தியாவுக்கு மிரடல் விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென பாராட்டு தெரிவித்துள்ளார். “மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது. இதனை அடுத்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் இந்தியா, அமெரிக்காவுக்கு உதவும் வகையில் அந்த மருந்தின் ஏற்றுமதிக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது….

மேலும்...