ஏர் இந்தியாவின் மொத்த பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு

புதுடெல்லி (27 ஜன 2020): ஏர் இந்தியாவின் ஒட்டுமொத்த பங்குகளையும் தனியாருக்கு விற்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது ஏர் இந்தியா விமான நிறுவனமானது சுமார் ரூ.58,000 கோடி கடனில் சிக்கித் தவித்து வருகிறது. இது தவிர அந்நிறுவனத்திற்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்களுக்கும் மேல் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை அடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 100 % பங்குகளையும், விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பங்குகளை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்க, தனியார்…

மேலும்...

மத்திய அரசிடம் போராடிக் கொண்டு இருக்கிறோம் – தமிழக அமைச்சர் பரபரப்பு தகவல்!

சென்னை (24 ஜன 2020): மாநிலங்களின் உரிமைகள் மத்திய அரசின் கைக்கு சென்று கொண்டிருப்பதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பாண்டியராஜன், “மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரம் சிறுகச் சிறுக மத்திய அரசுக்குக் கீழ் செல்வதாகவே தெரிகிறது. இதற்கு ஒரு நல்ல உணாரணம். ஜி.எஸ்.டி வரிமுறை. ஜி.எஸ்.டி வந்ததில் இருந்து நமக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைப் பெற மத்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஜி.எஸ்.டி…

மேலும்...

தூக்குத் தண்டனை விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு மனு!

புதுடெல்லி (22 ஜன 2020): தூக்குத் தண்டனைகளின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்துள்ளது. நிர்பயா வன்புணர்வு கொலை குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டும் குறிப்பிட்ட நாளில் தண்டனை நிறைவேற்றப்படாமல் தள்ளிப் போகிறது. இதனால் நாட்டில் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையிலும், தூக்குத் தண்டனை விவகாரத்தில் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. முக்கிய வழக்குகளில்…

மேலும்...

மீண்டும் ரிசர்வ் வங்கியில் ரூ 30 ஆயிரம் கோடி பணம் கேட்கும் மத்திய அரசு!

புதுடெல்லி (21 ஜன 2020): மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ஏற்கனவே இருமுறை பணம் பெற்றதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக ரூ. 30 ஆயிரம் கோடி பணம் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியானது 2018-ஆம் நிதியாண்டில் ரூ. 10 ஆயிரம் கோடியும், 2019-ஆம் நிதியாண்டில் ரூ. 28 ஆயிரம் கோடியும் ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு வழங்கியிருந்தது. இந்நிலையில் 2019-20 ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மொத்தமாக ரூ. 90 ஆயிரம் கோடியை பங்கு…

மேலும்...

நிர்மலா சீதாராமனின் அமைச்சர் பதவி பறிப்பு?

புதுடெல்லி (20 ஜன 2020): மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யபடலாம். அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அந்த பதவியிலிருந்து அவர் மாற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சராக பொறுப்பேற்று யார் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த மத்திய அமைச்சரவை…

மேலும்...

டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச்செயல் – ஸ்டாலின் கண்டனம்!

சென்னை (19 ஜன 2020): ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச்செயல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: , “ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட “சுற்றுச்சூழல் அனுமதியும்” “மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டமும்” தேவையில்லை என்று, சுற்றுச்சூழலையும் வெகுமக்கள் எண்ணத்தையும் பின்னுக்குத் தள்ளிச் சிறுமைப்படுத்தி, மத்திய பா.ஜ.க. அரசு கார்ப்பரேட் அணுகுமுறையுடன் அறிவித்திருப்பதற்கு திராவிட…

மேலும்...

மக்கள் தொகை பதிவேட்டில் பெற்றோர் பிறந்த தேதி, பிறந்த ஊர் அவசியமில்லை: மத்திய அரசு!

புதுடெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெற்றோர் பிறந்த தேதி, பிறந்த ஊர் போன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பது கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.. நாடு முழுவதும், 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) புதுப்பிக்கும் பணி வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்வது தொடர்பான மத்திய…

மேலும்...

குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே – ஆர் எஸ் எஸ்ஸின் அடுத்த திட்டம்!

மொராதாபாத் (18 ஜன 2020): குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் திட்டத்திற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம், மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) இல் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடியைக் கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தை வலியுறுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ், ‘இரண்டு குழந்தைகள்’ கொள்கை வடிவத்தில் கொண்டு வரும் எந்தவொரு சட்டத்தையும் ஆதரிக்கும். இது காலத்தின் தேவை என்று…

மேலும்...