கொளுத்தி எடுத்த வெயிலால் 95 பேர் பலி!

நியூயார்க் (05 ஜூலை 2021): அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இதுவரை இல்லாத அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இவற்றில், ஓரேகான் மாகாணத்தில் மட்டும் வெயில் பாதிப்புக்கு 95 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி மாகாண கவர்னர் கேட் பிரவுன் கூறும்போது, வெயில் பாதிப்புக்கு 95 பேர் உயிரிழந்திருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது. நாங்கள் பருவகால மாற்றத்திற்கு ஏற்ப தயார்படுத்தி கொள்ள பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் அனல் காற்று…

மேலும்...

மாஸ்க் தேவையில்லை – குறையும் கொரோனா – சாதித்த அரசு!

நியூயார்க் (23 மே 2021):கொரோனா பரவல் தொடர்ந்து குறைவதால் அமெரிக்கா கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் பொது இடங்களில் மாஸ்க்குகளை அணியத் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு உலகிலேயே கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்தது. அமெரிக்காவில் தற்போது வரை 3.38 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் ஆறு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன ஆனால்…

மேலும்...

பாலஸ்தீன முன்னேற்றத்திற்கான பைடன் திட்டம் – அரபு நாடுகள் வரவேற்பு!

துபாய் (28 ஜன 2021): பாலஸ்தீனத்திற்கு சாதகமாக தீர்வு ஏற்படுத்தப்படும் என்ற பைடன் நிர்வாகத்தின் முடிவை அரபு நாடுகள் வரவேற்றுள்ளன. அமெரிக்க அதிபர் பைடன் ஆட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகம், முஸ்லீம் நாடுகள் அமெரிக்காவில் நுழைய விதித்த தடையை நீக்கினார். இந்நிலையில் டிரம்ப் நிர்வாகத்தால் முடிவுக்கு வந்த பாலஸ்தீனத்துடனான இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்க உள்ளதாக பைடன் அறிவித்துள்ளார். மேலும் பாலஸ்தீனிய சமூகம் மீது “அனுதாப நிலைப்பாட்டை” எடுக்கும் என்று பிடன்…

மேலும்...

ஆர்.எஸ்.எஸ், பாஜகவுடன் தொடர்புடைய அதிகாரிகள் நீக்கம் – அமெரிக்க அதிபர் அதிரடி!

வாஷிங்டன் (22 ஜன 2021): ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுடன் தொடர்பு வைத்திருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை பைடன் அரசு, தனது நிர்வாகத்திலிருந்து நீக்கம் செய்துள்ளது. அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அந்நாட்டின் துணை அதிபராகப் பதவியேற்றார். ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்தே பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்களுக்கு…

மேலும்...

கலவரக் களமான வெள்ளை மாளிகை – டிரம்புக்கு எதிராக பேஸ்புக் ட்வீட்டர் நடவடிக்கை!

வாஷிங்டன் (07 ஜன 2021): அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது….

மேலும்...

5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் ஜோ பைடன்!

வாஷிங்டன் (08 நவ 2020): பரபரப்பான அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் 46வது அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் பைடன் ஆட்சி பொறுப்பேற்ற உடன் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். இதுவே அவரது முதல் கையெழுத்தாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி தஞ்சமடைந்துள்ள 1.1 கோடி பேர் உள்ளனர். அதில் 5 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர். எனவே…

மேலும்...

இந்தியா அசுத்தமான நாடு – ட்ரம்ப் கடும் விமர்சனம் : பிரதமர் மோடி அமைதி!

வாஷிங்டன் (23 அக் 2020): இந்தியா அசுத்தமான நாடு என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். நவம்பர் 3 ம் தேதி அமெரிக்கர்கள் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய உள்ளனர். கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ள அமெரிக்கர்கள் வாக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இனவெறி மற்றும் போலீஸ் மிருகத்தனம் போன்ற முக்கிய பிரச்சினைகள் தவிர, அவ்வப்போது பல பிரச்சினைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

மேலும்...

அமெரிக்காவை விஞ்சிவிடும் நிலையில் இந்தியா!

புதுடெல்லி (06 செப் 2020): கொரோனா பாதிப்பில் இந்தியா உலக அளவில் இரண்டாமிடத்தில் உள்ள நிலையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை தொட்டுவிடும் நிலையில் இந்தியா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் உள்ள கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரே நாளில் 90,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது உலகளவில் கொரோனாவால் சுமார் 2 கோடியே 70 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்…

மேலும்...

டொனால்ட் டரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்!

வாஷிங்டன் (28 ஜூலை 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு குடும்ப நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்பு ஓ’பிரையன் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவருக்கு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவர் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வீட்டில் இருந்தபடியே கவனித்து வருகிறார். ஓ’பிரையன் சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து திரும்பினார், இங்கிலாந்து,…

மேலும்...

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் கடும் எதிர்ப்பு!

வாஷிங்டன் (27 ஜூன் 2020): இந்திய குடியுரிமைச ட்டத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான இணையதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கின்றன.இது பல இனம் மதம் மொழி…

மேலும்...