சவூதி அரேபியாவின் புதிய உத்தரவு இந்தியர்களுக்கும் பொருந்தும்!

ரியாத் (30 நவ 2021): சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறையில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினரின் விசா மற்றும் குடியுரிமை அட்டை (இக்காமா) காலாவதி காலம் வரும் ஜனவரி 31, 2022 வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது இந்தியர்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் விசாக்கள் ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்கப்படும். சவூதிக்கு வர முடியாமல் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். சவூதி…

மேலும்...

சவூதி அரேபியாவில் ஊதியமின்றி சிக்கித் தவித்த தமிழர்கள் நாடு திரும்பினர்!

ரியாத் (29 ஆக 2021): சவுதி அரேபியாவின் அல்-ஹஸாவில் மூன்று வருடங்கள் ஊதியமின்றி சிக்கித் தவித்த தமிழர்கள் இருவர் நாடு திரும்பினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஜெயசேகரன் பிரான்சிஸ், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொத்தனார் வேலைக்காக சவூதி அரேபியா அல்ஹஸ்ஸாவுக்கு சென்றனர். முதல் ஆண்டு சம்பளம் சரியாக வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் அது நிறுத்தப்பட்டது. சம்பளம் வழங்கப்படாததற்காக தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் வேறொரு போலியான வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஒரு சமூக…

மேலும்...

வெளிநாட்டுப் பணியாளர்களின் விசா விதிமுறைகளைக் கடுமையாக்கும் குவைத் அரசு!

குவைத் (29 நவ 2020): “அறுபது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வெளிநாட்டுப் பணியாளர்களின் விசாக்களை புதுப்பிக்க வேண்டாம்” என குவைத் அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை அமல்படுத்துவதன் மூலம், 70,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அடுத்த ஆண்டுக்குள் குவைத்திலிருந்து, தத்தம் சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டியிருக்கும். குவைத் நாட்டின் வேலைவாய்ப்பு துறையில் உள்ளூர் மயமாக்கலை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை குவைத் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. இப்…

மேலும்...

துபாய் வரும் இந்தியா உள்ளிட்ட ஐந்து நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை!

துபாய் (17 அக் 2020): ஐந்து நாடுகளில் இருந்து துபாய் செல்லும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறைகளை செயல்படுத்துமாறு விமான மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன . துபாய் விமான நிலைய அதிகாரிகளின் சமீபத்திய அறிவுறுத்தல்களின்படி, பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து வருகை மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் துபாய் சர்வதேச விமான நிலையம் வரும்போது திரும்பிச் செல்லும் வகையில் உள்ள விமான டிக்கெட் வைத்திருக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத பயணிகள் புறப்பட்ட…

மேலும்...

இனி விசா வழங்கப்பட மாட்டாது – அமெரிக்க அதிபர் திடீர் உத்தரவு!

வாஷிங்டன் (12 ஏப் 2020): அமெரிக்காவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டினரை உடனடியாக அழைத்துக் கொள்ள வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். விசா தடைகள் தொடர்பாக டிசம்பர் 31 வரை நடைமுறையிலுள்ள வகையிலான அறிவிப்பை வெளியிட்டுள்ள டிரம்ப், தங்கள் குடிமக்களைத் திரும்ப அழைக்க மறுத்தாலோ அல்லது காரணமின்றித் தாமதித்தாலோ அந்த நாடுகள், அமெரிக்காவுக்குப் பெரும் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் எனக் குறிப்பிட்டுள்ளா். மேலும் அமெரிக்காவிலுள்ள தங்கள் நாட்டுக் குடிமக்களைத்…

மேலும்...