உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க 27 நாடுகள் ஒப்புதல்!

பாரிஸ்(26 பிப் 2022): உக்ரைனுக்கு 27 நாடுகள் ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளன. ரஷ்யா, உக்ரைன் மீது நடத்திவரும் தாக்குதலால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டும் வெளியேறி வருகின்றன. இந்தசூழலில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. கடலிருந்தும், வான்வெளியாகவும் ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தீவிரபடுத்தி வரும் ரஷ்யா, கீவில் உள்ள கீவ் நீர்மின் நிலையத்தையும், மெலிடோபோல் நகரையும் கைப்பற்றியுள்ளதாக…

மேலும்...

கும்பகோணம் அருகே துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சிக்கிய டாக்டர்!

கும்பகோணம் (21 மார்ச் 2020): கும்பகோணம் அருகே டாக்டர் ஒருவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் பகுதியில், அதிகளவில் துப்பாக்கிகள் புழக்கம் இருப்பதாகவும், இதனால் துப்பாக்கி பயன்படுத்துவது அதிகமாகியிருப்பதாகவும் குற்ற தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் எங்கு, எப்படி துப்பாக்கி கைக்கு வருகிறது; இதை யார் விற்பனை செய்கிறார்கள் என கண்டுபிடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து, கும்பகோணம் அடுத்த விளந்தகண்டம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர்…

மேலும்...

இந்தியவுக்கு நவீன ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா இந்தியா இடையே ஒப்பந்தம்!

புதுடெல்லி (24 பிப் 2020): இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்கா நவீன ஆயுதங்களை வழங்கும் வகையில், சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளன. இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது:- இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம். பாதுகாப்பு துறையில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக…

மேலும்...