Mamta-Banerjee

தேர்தல் தில்லுமுல்லு வழக்கில் மம்தாவை எதிர்த்து வெற்றி பெற்றவருக்கு நீதிமன்றம் நோட்டிஸ்!

கொல்கத்தா (14 ஜூலை 2021): தேர்தல் தில்லுமுல்லு வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுவேந்து அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் கட்சியில் அதிகாரமிக்க அமைச்சராகவும், மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சுவேந்து ஆதிகாரி 2020ஆம் ஆண்டு டிசம்பரில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இணைந்தவுடன் தேர்தலில் தன்னை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வென்று காட்டுங்கள் என்று மம்தாவுக்கு சவால்…

மேலும்...

பாஜக வைரஸ் – சானிடைசர் அடித்து சுத்தம் செய்யப்பட்ட பாஜகவினர்!

கொல்கத்தா (24 ஜூன் 2021): பாஜகவிலிருந்து திரிணாமுல் காங்கிரசில் இணைந்த 150 பேருக்கு பாஜக வைரஸ் இருப்பதாகக் கூறி அவர்களை சானிடைசர் அடித்து திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த தேர்தல் பாஜகவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்த நிலையில், பாஜக கூடாரம் காலியாகி வருகிறது. ஏற்கனவே திரிணாமுல் காங்கிரசிலிருந்து பாஜகவில் இணைந்தவர்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பி வருகின்றனர்.  இந்நிலையில் பிர்பூமின் இளம்பஜார் தொகுதியில் 150 பாஜகவினர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். இவர்களுக்கு பாஜக வைரஸ்…

மேலும்...
Mamta-Banerjee

மம்தா தோற்றது செல்லாது -அத்தனையும் தில்லுமுள்ளு – நீதிமன்றத்தில் வழக்கு!

கொல்கத்தா (18 ஜுன் 2021): மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றது மோசடி என்று முதல்வர் மம்தா பானர்ஜி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேற்கு வங்கத்தில் மார்ச் – ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது. இந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில், தனது கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவிய முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா போட்டியிட்டார்….

மேலும்...

மோடி படத்தை தூக்கிவிட்டு மம்தா பானர்ஜியின் படம் – பரபரப்பில் ஒன்றிய அரசு!

கொல்கத்தா (05 ஜூன் 2021): மேற்குவங்கத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்வோருக்கு சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் தூக்கப்பட்டு முதலமைச்சர் மம்தா பானர்ஜி படம் பதிக்கப்பட்ட சான்றிதழ் விநியோகிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாநில அரசு சார்பில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் படம் பதித்த சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடி படம் இடம்பெற்றுள்ளதற்கு தொடக்கத்தில் இருந்தே மேற்குவங்க மாநில முதல் வர் மம்தா பானர்ஜி…

மேலும்...

பாஜகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்க எதிர்ப்பு – ரகளையில் ஈடுபட்ட பாஜகவினர்!

கொல்கத்தா (20 மார்ச் 2021): மேற்குவங்கத்தில் புதிதாக பா.ஜ.க.வில் இணைந்தவர்களுக்‍கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்ததற்கு அக்‍கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்‍கும், பா.ஜ.க.வுக்‍கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 3-ம் முறையாக ஆட்சியை கைப்பற்ற செல்வி மம்தாவும், மம்தாவின் அரசை அகற்ற பா.ஜ.க.-வினரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், திரிணாமூல் காங்கிரசிலிருந்து அண்மையில் விலகி பா.ஜ.க.வில்…

மேலும்...

போதை மருந்து வழக்கில் பாஜக பெண் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது!

கொல்கத்தா (20 பிப் 2021): கொக்கெய்ன் வைத்திருந்த பாஜக இளைஞர் அணி தலைவர் பமீலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்து 100 கிராம் கொக்கெய்ன் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களுடன் அவரது நண்பர் பிரபீர் குமார் தேயும் கைது செய்யப்பட்டார். ‘பமீலா சில மாதங்களுக்கு முன்பு, போதை பொருள் மாஃபியா கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்தி . சிலரை போதைக்கு ஆளாக்கியுள்ளனர். இதற்கு பிரபிர் பாமீலாவிற்கு உதவியுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்ட தேடலின் போது அவர்கள் கைது…

மேலும்...

வெடிகுண்டு வீச்சில் அமைச்சர் ஜாகிர் உசைன் படுகாயம் – மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

கொல்கத்தா (18 பிப் 2021): மேற்கு வாங்க தொழிலாளர் துறை அமைச்சர் ஜாகிர் உசைன் மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டார். மம்தா அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஜாகிர் உசைன் கொல்கத்தா நகருக்கு செல்வதற்காக நிம்திதா ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சில மர்ம நபர்கள் திடீரென அவர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவர் பலத்த காயமடைந்து உள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜாகிர் உசைனை…

மேலும்...

ஜெய் ஸ்ரீராம் என கூச்சலிட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அனுமதிக்க மாட்டார்: மஹுவா மொய்த்ரா!

கொல்கத்தா(24 ஜன 2021): “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இப்போது இருந்தால் ஜெய் ஸ்ரீராம் என கூச்சலிட அனுமதித்திருக்க மாட்டார்” என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்தாரா தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளான நேற்று கொல்கத்தாவில் மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த ‘பரக்ரம் திவாஸ்’ விழாவில் கூட்டத்தின் போது பாஜக ஆர்வலர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களை எழுப்பியதை அடுத்து கோபத்தில் மம்தா பானர்ஜி அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இந்த விழாவில்…

மேலும்...

மேற்கு வங்கத்தில் மம்தா அமைச்சரவையிலிருந்து மற்றும் ஒரு அமைச்சர் ராஜினாமா!

கொல்கத்தா (22 ஜன 2021): மேற்கு வங்க மம்தா தலைமையிலான அமைச்சரவையிலிருந்து வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளார். தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸிலிருந்து தொடர்ந்து பலர் விலகி வருவதால் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ராஜீப் பானர்ஜியும் பதவி விலகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ராஜீப் பானர்ஜி தனது மேற்கு வங்காள மக்களுக்கு சேவை செய்ய முடிந்ததில் பெருமை…

மேலும்...