49 ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது!

நியூயார்க் (03 ஜன 2023): பழைய ஸ்மார்ட்போன் பதிப்புகளில் இனி WhatsApp கிடைக்காது. ஆப்பிள், சாம்சங், ஹூவாய் மற்றும் எல்ஜி போன்ற பழைய போன்களில் வாட்ஸ்அப் செயல்படுவதை நிறுத்தியுள்ளது. WhatsApp பயன்பாடு இப்போது Android OS பதிப்பு 4.1 மற்றும் அதற்கு மேல் மற்றும் iOS 12 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றில் வேலை செய்யும். “தொழில்நுட்பத்தில் புதிய மாற்றங்களைத் தொடர, பழைய இயக்க முறைமையில் வாட்ஸ் அப் வேலை செய்வதை நிறுத்தியுள்ளது. இதுகுறித்து உங்கள் OS இல்…

மேலும்...

இனி தவறான செய்திகளை அனுப்பினால் உங்கள் வாட்ஸ் அப் முடக்கப்படலாம்!

புதுடெல்லி (21 மார்ச் 2022): Meta நிறுவனத்திற்குச் சொந்தமான WhatsApp பயனர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் தொழில்நுட்பச் சட்ட விதிகளை சமூக வலைத்தள நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. இதனையடுத்து, நாட்டில் சேவை அளித்துவரும் பெரிய சமூக வலைத்தளங்கள், புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் அரசிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அந்த வகையில், வாட்ஸ்அப் கடந்த மாதங்களில் லட்சக் கணக்கிலான கணக்குகளை முடக்கியதாக தகவல் வெளியிட்டிருந்தது….

மேலும்...

இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பைப் பரப்பும் வாட்ஸ் அப் – அதிர வைக்கும் புள்ளி விவரம்!

வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் மூன்றில் ஒரு குறுஞ்செய்தி இஸ்லாம் மீதான பயத்தையும், வெறுப்பையும் விதைக்கும் விதமாக இருக்கின்றன என்று ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 2018-ல் இருந்து ஆகஸ்ட் 2019-வரை வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை Fear Speech, Normal என இருவகைகளாகப் பிரித்துள்ளனர். இதில் வாட்ஸ்அப் குழுக்களில் அனுப்பப்படும் மூன்றில் ஒரு குறுஞ்செய்தி இஸ்லாம் மீதான பயத்தையும், வெறுப்பையும் விதைக்கும் விதமாக இருப்பதாக அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கிறது. மேலும், இந்த மாதிரியான Fear Speech வகை…

மேலும்...

வாட்ஸ்ஆப் அப்டேட்டிங் திட்டத்தில் திடீர் மாற்றம்!

நியூயார்க்(16 ஜன 2021): வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டிங் கொள்கையை அமல்படுத்துவதை மே 15 வரை ஒத்திவைத்துள்ளது. கடந்த மாதம் வாட்ஸ்ஆப் அப்டேட்டிங்கில் தனி மனித சுதந்திர தலையீடு இருக்கக் கூடும் என்ற அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எதிர்ப்புக்களை சம்பாதித்துக் கொண்டது. இதனை அடுத்து அப்டேட்டிங் புதுப்பிப்பைத் தற்போதைக்குச் செயல்படுத்த வேண்டாம் என்று வாட்ஸ்ஆப் முடிவு செய்துள்ளது. மேலும், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களுக்கு மக்கள் பெருமளவில் மாறுவது வாட்ஸ்ஆப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது….

மேலும்...

பயனர்களுக்கு வாட்ஸ் அப்பின் முக்கிய விளக்கம்!

நியூயாக் (12 ஜன 2020): பரபரப்பான சூழலில் பயனர்களுக்கு வாட்ஸ் அப் முக்கிய அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பயனர்களின் பிரைவசியில் வாட்ஸ் அப் தலையிடாது. பயனர்களின் உரையாடல்களை வாட்ஸ் அப்,/பேஸ்புக் கவனிக்காது. பயனர்களின் தகவல்களை வாட்ஸ் அப் சேமிக்காது. தொடர்பு  எண்களை பேஸ்புக்குடன் பகிறாது. குறிப்பிட்ட காலங்களில் மெஸேஜ்களை பயனர்களே நீக்கம் செய்யலாம். வாட்ஸ் அப் குழுமங்கள் வழக்கம்போல் செயல்படலாம் வழக்கம்போல் பகிர்வுகள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். வாட்ஸ் அப் குறித்து வெளியான பரபரப்பான தகவல்களை…

மேலும்...

வாட்ஸ்அப் நிபந்தனைகள் – அச்சம் கொள்ள என்ன இருக்கிறது?!

பிப்ரவரி மாதம் முதல் வாட்ஸ்அப் புதிய நிபந்தனைகள் விதிக்க உள்ளதாகவும் இதனால் பயனர்களின் தனிப்பட்ட சுதந்திரங்கள் பறிபோகுமெனவும் எனவே சிக்னல், டெலக்ராம் போன்ற வேறு செயலிகளுக்கு மாறுவது நல்லது எனவும் செய்திகள் பரவலாகப் பகிரப்படுகின்றன. இந்த அளவுக்கு அச்சம் கொள்ள அதில் என்ன இருக்கிறது, நிஜமாகவே வேறு செயலிகளுக்கு மாறத்தான் வேண்டுமா என்பது குறித்து விவரமாக பார்ப்போம். பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப் போவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ள புதிய நிபந்தனைகளின் மொத்த சாராம்சம் இதுதான். வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின்…

மேலும்...

கொரோனா எதிரொலியால் குறைந்த வாட்ஸ் அப் சேவை – திணறும் வாடிக்கையாளர்கள்!

புதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக வாட்ஸ் அப் தனது சேவையை குறைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் மக்களின் பொழுதுபோக்காக தொலைக்காட்சியும் மொபைலுமே உள்ளன. அதிலும் மொபைல் போனிலே மக்கள் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். மேலும், ஐ.டி நிறுவனங்கள் பல தங்களது பணியாளர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும்படி…

மேலும்...

திடீரென ஸ்தம்பித்த வாட்ஸ் அப்!

புதுடெல்லி (19 ஜன2020): வாட்ஸ் அப் சமூக வலைதளம் திடீரென ஸ்தம்பித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வாட்ஸ்அப் சேவை பாதிக்கப்பட்டதால் வாட்ஸ்அப் டவுன் என்ற பெயரில் ட்விட்டரில் ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது. உலகின் பல்வேறு இடங்களிலும் வாட்ஸ் அப்பில் வீடியோ, புகைப்படம் பதிவேற்றம் ஆகாததால் பயனாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து வாட்ஸ்அப் நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

மேலும்...