சவுதி தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு 93 சதவீதம் அதிகரிப்பு!

ரியாத் (10 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் தொழில் துறையில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தத் துறையில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 93% அதிகரித்துள்ளது என்று தொழில் மற்றும் கனிம வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தொழில் மற்றும் கனிம வள அமைச்சகம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், இந்தத் துறையில் 33,000 பேர் பணிபுரிந்தனர். 2022ஆம் ஆண்டின்…

மேலும்...

ஆயுதங்கள் வைத்திருக்கும் இந்து தெய்வங்கள் மீது வழக்கு பதியட்டும் -இந்துமத தலைவரின் சர்ச்சை பேச்சு!

பெங்களூரு (13 ஜன 2023): இந்துக்கள் வீட்டுக்குள் ஆயுதங்கள் வைத்திருப்பது குற்றமல்ல என ஸ்ரீராம சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார். இந்து பெண்களின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு இந்து வீடுகளிலும் ஆயுதங்கள் வைக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். கலபுர்கியில் நேற்று நடைபெற்ற இந்து சமயத் தலைவர்கள் கூட்டத்தில் பிரமோத் முத்தாலிக் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரமோத் முத்தாலிக் இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துகளை…

மேலும்...

முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தாலிபான் விருது!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் நடைபெற்ற உயர்கல்விக்கான தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வுகளில் ‌சல்ஜி பரன் என்ற மாணவி முதலிடம் பெற்றார். அவருடன் முதல் பத்து மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா உயர்கல்வி அமைச்சரக அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. தாலிபான் அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் ஷேக் அப்துல் பகி ஹக்கானி மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவித்த 12 இந்திய பெண்கள் மீட்பு!

துபாய் (15 டிச 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த மோசடியினால் சம்பளம் இன்றித் தவித்த 12 இந்திய பெண்கள் மீட்கப் பட்டுள்ளனர். இந்திய துணைத் தூதரகம் மற்றும் அஜ்மான் இந்திய சங்கம், மற்றும் காவல்துறையின் உதவியுடன், இவர்கள் மீட்கப் பட்டுள்ளனர். விசாரணையில், இவர்கள் அனைவரும் முகவர்கள் மூலம் ஏமாற்றப் பட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டோரிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்ட பிறகு, அவர்கள் பாதுகாப்பாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப் படுவார்கள்….

மேலும்...

பெண்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

சென்னை (24 அக் 2020): பெண்கள் எனது 40 நிமிட உரையை முழுமையாக கேட்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொல்.திருமாவளவன் சமீபத்தில் பேசிய நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பதாக பாஜகவை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த திருமாவளவன், தான் பேசியது திரித்து கூறப்பட்டிருப்பதாகவும், மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளதையே தான் குறிப்பிட்டு பேசியதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிற்படுத்தப்பட்ட மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்துவதும்…

மேலும்...

அடுத்தடுத்து குழந்தைகள் – நடிகை அமலாபால் அதிரடி!

சென்னை (30 ஏப் 2020): திரைப்பட நடிகை அமலாபாலுக்கு சினிமா வாய்ப்பு உள்ளதோ இல்லையோ, இப்போது சமூக வலைதளங்களில்தான் அதிக பிசியாக உள்ளார். பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகை அமலாபால் திடீரென இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டார். கண் மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் இருவரும் விவாகரத்து பெற்றனர். அமலாபால் என்றாலே சர்ச்சை என்பது ஆகிவிட்டது. இவரின் விவாகரத்துக்குப் பின்னால், இவரையும் தமிழின் பிரபல நடிகரையும் முன்னிலை படுத்தி கிசுகிசுக்கப்பட்டது. அது…

மேலும்...

மற்றும் ஒரு குஜராத் மாடல் அதிர்ச்சி – பெண்களை நிர்வாணமாக்கி சோதனை!

சூரத் (22 பிப் 2020): குஜராத்தில் மருத்துவமனை ஒன்றின் பணியாளர்களுக்கு உடற்தகுதி சோதனை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தி சோதனை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தொழிற்சங்கம் தனது புகாரில் கூறி உள்ளதாவது:- மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்த பெண்கள் சோதனைக்காக அறையில் ஒன்றன் பின் ஒன்றாக அழைப்பதற்கு பதிலாக, பெண் மருத்துவர்கள் அவர்களை 10 பேரையும் குழுவாக நிர்வாணமாக நிற்க வைத்ததுள்ளார்கள். மற்றவர்களுடன் நிர்வாணமாக நிற்க அவர்களை கட்டாயப்படுத்தும் இந்த செயல் மிகவும் இழிவானது. அவர்களது முறை…

மேலும்...

மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல – முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்!

புதுடெல்லி (30 ஜன 2020): மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் பெண்கள் மசூதிக்கு செல்வதில் எந்த தடையும் இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெண்களை வழிபாட்டுத் தலங்களில் அனுமதிப்பது தொடர்பான விசாரணையில் இதுகுறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், “, மசூதிகளில் வழிபாட்டுக்காக…

மேலும்...

சிஏஏ போராட்டம் – பெண்களை குறி வைக்கும் அரசு!

காஞ்சிபுரம் (29 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலப் போராட்டம் நடத்திய பெண்கள் கைது செய்யப் பட்ட நிலையில் தற்போது சுவரில் ஓவியம் வரைந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகின்றன. இந்தப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகித்தாலும், கோலம் போட்டு…

மேலும்...