50 டிகிரி கடும் வெப்பம் – 486 பேர் பலி!

டொரோண்டோ (01 ஜூலை 2021): கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு நிலவும் வெப்பத்தின் காரணமாக, பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் 486 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவுக்கு பெயர் போனது கனடா நாடு. அங்கு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடைக்காலம். இந்தாண்டு கோடைக்காலம் கடும் வெப்பமானதாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் செவ்வாயன்று புதிய உச்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பள்ளிகள், தடுப்பூசி மையங்களை மூட…

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு!

பீஜிங் (24 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. தொடர்ந்து, முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மத்திய நகரமான வுஹானில் வைரஸ் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள 1,072 பேரையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும்,…

மேலும்...

திடீரென ஸ்தம்பித்த வாட்ஸ் அப்!

புதுடெல்லி (19 ஜன2020): வாட்ஸ் அப் சமூக வலைதளம் திடீரென ஸ்தம்பித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வாட்ஸ்அப் சேவை பாதிக்கப்பட்டதால் வாட்ஸ்அப் டவுன் என்ற பெயரில் ட்விட்டரில் ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது. உலகின் பல்வேறு இடங்களிலும் வாட்ஸ் அப்பில் வீடியோ, புகைப்படம் பதிவேற்றம் ஆகாததால் பயனாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து வாட்ஸ்அப் நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

மேலும்...