10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தக விநியோகம்!

146

சென்னை (11 ஜூலை 2020): அரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது,

மேலும் சமூக விலகலை பின்பற்றி புத்தகம் வழங்கவும் பள்ளி கல்வித்துறை அந்த அறிவிபில் கூறியுள்ளது.. 12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக மென்பொருளை மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தர ஏற்பாடு செய்யப்படும்

இதைப் படிச்சீங்களா?:  கொரோனாவின் கோர முகம் - மகனும் தாயும் மரணம்!

மென்பொருள் பதிவேற்றத்திற்கு ஒரே நேரத்தில் அதிக மாணவர்களை வரவழைக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.