பாஜகவை வீழ்த்த ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு மெகா பிளான்!

November 09, 2018

சென்னை (09 நவ 2018): பாஜகவை வீழ்த்த ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று ஸ்டாலின் மற்றும் சந்திர பாபு நாயுடு சந்தித்துப் பேசவுள்ளனர்.

ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்த நிலையில் நேற்று மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவேகவுடா மற்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ள சந்திரபாபு நாயுடு, பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற மெகா கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மாலை 6 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி அமைப்பது, அந்த கூட்டணியில் எந்தெந்த கட்சியை இணைப்பது என்பது குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!