தமிழகத்தில் ஒரே நாளில் 3943 பேருக்கு கொரோனா தொற்று – 60 பேர் உயிரிழப்பு!

சென்னை (30 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, வேலூர், கள்ளக்குறிச்சி உள்பட 34 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு புதிதாக அதிகரித்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  பதைபதைக்கும் பாலிவுட் - அமிதாபை தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று!

இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167 உயர்ந்து உள்ளது.கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது.