தமிழகத்தில் ஒரே நாளில் 4280 பேர் கொரோனாவால் பாதிப்பு!

சென்னை (06 ஜூலை 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளன. சென்னையில் ஆயிரத்து 842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து ஒன்றாகவும், சென்னையில் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 538 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  நடிகை ஜோதிகா செய்த மகத்தான உதவி - அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு!

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் 352 பேருக்கும், அதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் 251 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 215 பேருக்கும் கொரோனா தொற்று அதிகளவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.