அதிராம்பட்டினம் அருகே உள்ள பிரைம் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா!

பட்டுக்கோட்டை (02 மார்ச் 2023): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே புதுக்கோட்டை உள்ளூரில் உள்ள பிரைம் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளியில் 2 ஆம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா கடந்த 26 பிப்ரவரி மாதம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திரு மோகன சுந்தரம் கலந்துகொண்டு நகைச்சுவையாக பேசி பார்வையாளர்களை கலகலப்பூட்டினார்.

மேலும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாட்டை பள்ளி தாளாளர் திரு ஃபைசல் அஹமது மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கு வந்த பெற்றோர் பொதுமக்களுக்கு சிறப்பு உபசரிப்பும் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...