தமிழக பாஜக தலைவராகும் அமர் பிரசாத் ரெட்டி?- அதிர்ச்சியில் அண்ணாமலை!

சென்னை (13 டிச 2022): தமிழக பாஜக தலைவராவதற்காக அமர் பிரசாத் ரெட்டி காய் நகர்த்தி வருவதாக திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆபாச ஆடியோ விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னமான திருச்சி சூர்யா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் பாஜகவிலிருந்து விலகிய பின்பு பாஜக தலைவர்கள் பலர் மீது பகீர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

குறிப்பாக ஆர் எஸ் எஸ் கேசவ விநாயகம் என்பவர் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்நிலையில் யூடூப் சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அமர் பிரசாத் ரெட்டி குறித்து கூறுகையில், அடுத்த பாஜக தலைவராவதற்கு ஆயத்த வேலைகளில் இருப்பதாக கூறியுள்ளார்,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உள் கட்சிக்குள் பல எதிர்ப்புகள் இருப்பதை வெளிப்படையாகவே கூறி வரும் திருச்சி சூர்யாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாட் நியூஸ்: