தடையை மீறி ஆண்டாள் கோவிலில் குவிந்த பக்தர்களால் பரபரப்பு!

Share this News:

விருதுநகர் (16 ஜுலை 2020): ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தடையை மீறி பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப் படுவது வழக்கம்.

கொரோனா பரவலால் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், தேரோட்டக் காட்சிகள் யூ – டியூப் வலைதளத்தில் வெளியிடப்படும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்தது.

எனினும், கொடியேற்றத்தை முன்னிட்டு சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கொடிப்பட்டம் மாட வீதிகளில் மேள-தாளம் முழங்க ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் கொடிப் பட்டத்திற்கும் சிறப்பு பூஜைகள் தீப ஆராதனைகள் நடைபெற்றன. கொடியற்றத்தை முன்னிட்டு, கொடியை அர்ச்சகர் வாசுதேவன் ஏற்றினார்.

ஆனால் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூடியதைக் கண்டு வேறுவழியின்றி, கோயிலுக்குள் பக்தர்களுக்கு செயல் அலுவலர் அனுமதி வழங்கினார்.

இதனால், பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சமூக இடைவெளி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனதால், கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Share this News: