அதிமுக தலைமை குறித்து அன்வர் ராஜா ஓப்பன் டாக்!

Share this News:

சென்னை (04 ஜன 2020): அதிமுகவுக்கு ஒரு முஸ்லிம் கூட ஓட்டு போட மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனது மகனையும், மகளையும் நிறுத்தி படுதோல்வி அடைந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தே நான் என் பிள்ளைகள் இருவரையும் நிறுத்தினேன். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் எங்கள் ஊரில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரளித்ததால் அதிமுகவுக்கு எப்படி மக்கள் ஓட்டு போடுவார்கள்?, அது எனக்கு தெரியும், எனினும், அதிமுக தரப்பில் யாரும் போட்டியிட முன் வராததால், அதிமுகவின் 50 ஆண்டு கால உறுப்பினர் என்ற வகையிலும், இக்கட்சியை உறுவாக்கியவர்களில் ஒருவன் என்ற வகையிலும், தோல்வியையும் சந்திப்போம் என்றே நிறுத்தினேன்.” என்றார்.

அதிமுக தலைமை குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவளித்தது தவறு என்று ஏற்கனவே வெளிப்படையாக கூறிய நிலையில், தலைமை என்ன கூறினாலும் பொதுவான முஸ்லிம்கள் அதிமுகவை நம்புவதாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே அதிமுக மீது அதிருப்தியில் உள்ள அன்வர் ராஜா திமுகவில் இணையவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply