சாவர்க்கரின் சாதனையை முறியடித்த அர்ணாப் கோஸ்வாமி!

புதுடெல்லி (24 டிச 2020); ஊடகங்களில் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மூலம் புகழ் பெட்ற அர்ணாப் கோஸ்வாமி 280 முறை மன்னிப்பு கேட்ப தன் மூலம் சாவர்க்கரின் சாதனையை முறியடித்ததாக நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் விமர்சித்துள்ளனர்.

குடியரசு டிவி, அர்னாப் கோஸ்வாமிக்கு சொந்தமானது, இதில் கடந்த செப்டம்பர் 6, 2019 அன்று ஒளிபரப்பப்பட்ட வெறுக்கத்தக்க பேச்சு, அநாகரீகமான மொழி மற்றும் தவறான மற்றும் கேவலமான நடைமுறைக்காக, இங்கிலாந்து தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகம் 19 19 பவுண்ட்ஸ் (19 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.

சர்சைக்குரிய அந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் மக்களை அவமதித்ததாகவும், நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தில் வெறுக்கத்தக்க கருத்துக்கள் இருந்ததாகவும் பிரிட்டிஷ் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகம் அர்ணாப் மீது குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் பாகிஸ்தானின் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதன் விளையாட்டு வீரர்கள் கூட தீவிரவாதிகள் என்பதாக அர்னாப் பேசியதாக தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் ரிபப்ளிக் டிவியின் கேவலமான அந்த செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.

இந்நிலையில் அர்ணாப் தான் செய்த தவறுக்காக ஆஃப்காமிடம் மன்னிப்பு கோரியதுடன், பிரச்சினையைத் தீர்க்க பார்வையாளர்களிடம் 280 முறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இதனை நெட்டிசன்கள் அர்ணாப் கோஸ்வாமி மன்னிப்பு கேட்பதில் சாவர்கரையே மிஞ்சிவிட்டதாக அவரது மன்னிப்பு கடிதத்தை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

ஹாட் நியூஸ்: