மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக பாஜக!

சென்னை (28 ஜன 2020): தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது பதிந்துவிட்டு பின்பு நீக்கம் செய்வது வாடிக்கை.

அந்த வகையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குறித்த ஒரு பதிவை பதிந்துவிட்டு தற்போது நீக்கம் செய்துள்ளது.

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவருமான ஓமர் அப்துல்லாவின் கடந்த ஐந்து மாதங்களாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது தாடியுடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இதனை கிண்டல் செய்யும் வகையில் தமிழக பாஜக பதிவொன்று இட்டிருந்தது. அதில்,ஒமர் அப்துல்லாவுக்கு அமோசனில் ஷேவிங் பிளேடு ஆர்டர் செய்து பரிசாக அனுப்புவது போன்று பதிவிட்டிருந்தது.

இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து அந்த பதிவை தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கம் செய்துள்ளனர்.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...