நீட் தேர்வுக்கு தடை – பாஜக அந்தர் பல்டி!

Share this News:

சென்னை (23 ஜூன் 2021): தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதில் பாஜக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதல் உடனடியாக பெற வேண்டும் என பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நிலைப்பாடு, இதுவே அதிமுகவின் நிலைப்பாடாக உள்ளது. இதற்கு பாஜக குரல் கொடுக்க தயாரா? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்த பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டத்திற்கு உட்பட்ட நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு விளக்கிக் கூறினால் அதற்கு ஆதரவு தெரிவிப்போம் என தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply