சென்னையில் போராட்டத்தின்போது உயிரிழந்தவர் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்!

சென்னை (15 பிப் 2020): சென்னை வண்ணாரப் பேட்டையில் போராட்டத்தின்போது உயிரிழந்தவர் உடலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று அமைதி வழியில் தொடர் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்த நிலையில் அவர்கள் மீது காவல்துறை கொடூரமானத் தாக்குதலை நடத்தியுள்ளது. சென்னை மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாக உள்ளது என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது.

மேலும் நேற்று போலீசார் தடியடி நடத்தியபோது முதியவர் உயிரிழந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று உயிரிழந்த முதியவரின் உடலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னையில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

ஹாட் நியூஸ்: