தலித் மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை மீது வழக்கு!

ஈரோடு (03 டிச 2022): ஈரோட்டில் தலித் மாணவர்களை வைத்து பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் உள்ள அரசுப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்களுடன் தலைமையாசிரியை கழிவறையை சுத்தம் செய்துள்ளார்.

மாணவி ஒருவரின் தாயார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆனால் தலைமை ஆசிரியை கீதா ராணி தலைமறைவாக உள்ளார்.

புகாரின்படி, கழிவறையை சுத்தம் செய்ய தலித் மாணவர்களை மட்டும் தலைமை ஆசிரியை தேர்வு செய்துள்ளார்.

சமீபத்தில் ஆசிரியையின் மகன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இதில் பள்ளிக்குள் டெங்கு காய்ச்சல் எப்படி பரவியது என்று விசாரித்துள்ளார்.

கழிவறையைச் சுத்தம் செய்யும் போது கொசு கடித்ததாக ஒரு மாணவர் தெரிவித்துள்ளார்.

அந்த மாணவனின் தாய் மூலம் தான் இந்த தகவல் வெளியே வந்திருக்கிறது.

கடந்த வாரம் கழிவறையிலிருந்து மாணவர்கள் வாளிகள், துடைப்பம் போன்றவற்றுடன் வெளியே வருவதைப் பெற்றோர்கள் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர்களிடம் கேட்டபோது, ​​தலைமை ஆசிரியையின் கழிவறையைச் சுத்தம் செய்வதாக தெரிவித்தனர்.

வகுப்பில் 40 குழந்தைகள் உள்ள போதும், தலித் மாணவர்களை மட்டும் கழிவறையைச் சுத்தம் செய்ய தலைமை ஆசிரியை உத்தரவிட்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“தீண்டாமை ஒரு பாவச்செயல்!” என தினசரி பாடம் எடுக்கும் ஆசிரியரே, இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டது பற்றி காவல்துறை விசாரணை தொடர்கிறது.

ஹாட் நியூஸ்:

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...