சென்னை (17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நான்காவது நாளாக போராட்டம் தொடர்கிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள் சாதி மத பேதமின்றி போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை அடுத்து சென்னையும் டெல்லியை போன்று ஷஹீன் பாக்காக மாறியது.
இதனை தொடர்ந்து சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல தமிழகமெங்கும் போராட்டம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி சென்னை சட்டமன்றத்தை நோக்கி முற்றுகை போராட்டமும் நடத்தப்படும் என்று அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்ணடி
சென்னை மண்ணடியில் நடைபெற்று வரும் CAA எதிர்ப்பு தொடர் போராட்டம்
சென்னை மண்ணடியில் நடைபெற்று வரும் CAA எதிர்ப்பு தொடர் போராட்டம்
Posted by Inneram on Sunday, February 16, 2020