குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

கடையல்லூர் (19 பிப் 2021): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பேசும்போது தெரிவித்ததாவது:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்ததியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்படும். சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர மற்றவை ரத்து செய்யப்படும்.

கூடங்குளத்தில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலனை செய்யப்படும். காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, வன்முறை தொடர்பான வழக்குகள் தவிர்த்து மற்ற வழக்குகள் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக சிஏஏ உள்ளிட்ட போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று முதல்வருக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...