தமிழகத்தில் நீட் தேர்வு எப்போது நடத்தலாம்? – முதல்வர் தகவல்!

228

சென்னை (27 ஆக 2020): கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  உதய சூரியன் ஒழிக - அண்ணா அறிவாலயத்தில் கோஷம்!

கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாதபோதும் கூட, தமிழகத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.