மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி: முதல்வர் உத்தரவு!

161

சென்னை (10 ஜூன் 2020): தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி, தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், மருத்துவர்களின் பணிக்காலத்தை நீட்டித்தும், கூடுதல் மருத்துவர்களை பணி அமர்த்தியும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக புதிதாக 1,239 மருத்துவர்கள் உள்பட 2,834 மருத்துவ பணியாளர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு படித்த 574 மருத்துவர்களுக்கு ரூ.75,000மும், 665 மருத்துவர்களுக்கு ரூ.60,000மும் ஊதியமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அசாதாரண சூழலிலும் அயராது பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார்.