எஸ்.வி.சேகரை கிண்டலடித்த முதல்வர் எடப்பாடி!

Share this News:

திண்டுக்கல் (07 ஆக 2020): எஸ்.வி.சேகர் எந்த கட்சியை சேர்ந்தவர்? என்று முதல்வர் எடப்பாடி கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், எஸ்வி சேகரின் கருத்து குறித்து கேட்டபோது,

“எஸ்.வி சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு என வந்தால் ஒளிந்து கொள்வார். எங்களுக்கு இந்தி தெரியும் என எப்படி அவருக்கு தெரியும்? அவரையெல்லாம் ஒரு பெரிய கட்சி தலைவராகவே நான் கருதவில்லை. அவர் முதலில் எந்த கட்சி என கேள்வி எழுப்பிய முதல்வர், அதேபோல் பாஜகவை விட்டு நாயனார் நாகேந்திரன் அ.தி.மு.கவுக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் எனவும், இருமொழிக் கொள்கை என்பதே தமிழகத்தில் தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை.” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி செய்துள்ளார்.

மேலும் இ-பாஸ் பெறுவதற்கு ஒரே குழு மட்டும் இருந்த நிலையில், தற்போது எளிமையாக இ-பாஸ் பெறுவதற்காக இரு குழுக்கள் அனைத்து மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இ-பாஸ் பெறுவது எளிமையாகப்படும் என தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply