நீட் தேர்வு தற்கொலை விவகாரம் – ஸ்டாலினை மடக்கிய முதல்வர் எடப்பாடி!

196

சென்னை (15 செப் 2020): நீட் தேர்வு முறை கொண்டு வருவதற்கு திமுகவே காரணம் என்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழக சட்டசபை கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று இரண்டாம் நாளாக சட்டசபை கூட்டம் நடந்துவரும் நிலையில், இன்றையை கூட்டத்தொடரில் நீட் தேர்வால் மன உளைச்சலில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாக திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்நிலையில் 2010 இல் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது நீட் தேர்வுக்கு சட்டம் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தபோது திமுக கூட்டணியில் இருந்ததா, இல்லையா? என ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

இதைப் படிச்சீங்களா?:  விடுதலைக்கு தயாராகும் சசிகலா!

மேலும் தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலை செய்துகொண்டதற்கு திமுகதான் காரணம். கூட்டணியிலிருந்த திமுக நாட்டை குட்டிச்சுவராக்கி உள்ளது. இதனால் தான் 13 பேர் மரணமடைந்துள்ளனர். நீட் எப்போது யார் கூட்டணியில் வந்தது, யார் அறிமுகப்படுத்தினார்கள் ? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.