குஷ்பூ விலக காரணம் ஏன்? – பிரபல இயக்குனர் மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

210

சென்னை (13 அக் 2020): காங்கிரஸிலிருந்து குஷ்பூ விலக குஷ்பூவின் கணவரம் இயக்குனருமான சுந்தர்.சி. யே காரணம் என்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

நடிகை குஷ்பூ காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் அவரது விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான கோபண்ணா, “குஷ்பு கொஞ்ச காலமாகவே கட்சியின் செயல்பாடுகளில் ஆர்வம் குறைந்து காணப்பட்டார்… ஷூட்டிங்கிலும் பிசியாக இருந்தார்…

இதைப் படிச்சீங்களா?:  ஆயுத பூஜை விற்பனை மந்தம் - வியாபாரிகள் கவலை!

நாங்க அழைக்கும்போதுகூட, வெளிநாடுகளில் ஷூட்டிங்கில் இருப்பதாகவே தகவல்கள் வந்தன.. இப்போது சுந்தர் சி.தான் குஷ்பூவை பாஜகவில் இணைய வைத்திருக்கிறார்… சொல்லபோனால், அவரது அழுத்தத்தின் பேரிலேயே குஷ்பு பாஜகவில் இணைய முடிவெடுத்திருக்கக் கூடும்” என்றார்.

குஷ்பூவின் திடீர் நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.