சாக வேண்டும் என்றே வீதிக்கு வருகிறார்கள் – யோகி ஆதித்யநாத்தின் விஷம் கக்கும் பேச்சு!

Share this News:

லக்னோ (19 பிப் 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்துக்கு வருபவர்கள் சாகுவதற்காகவே வருகிறார்கள் என்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடூரமாக பேசியுள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் 2 மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களில் மட்டும் 22 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பலர் போரட்டங்களில் கலந்து கொள்ளாத அப்பாவி மக்களும் அடங்குவர்.

உத்திர பிரதேசத்தில் கொல்லப்பட்டவர்கள் யாரும் போலீசாரால் கொல்லப்படவில்லை என்று உபி அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில் . அம்மாநில சட்டசபையில் இன்று சமாஜ்வாதி கட்சியினர் இப்பிரச்சனையை எழுப்பினர். சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களின் போது துப்பாக்கிச் சூடுகளில் பலியானோர் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியினர் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், “ஒருவர் சாக வேண்டும் என்று சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்துக்கு வரும்போது உயிருடனான இருக்க முடியும்? சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களின் போது சிறப்பாக செயல்பட்ட போலீசார் பாராட்டுக்குரியவர்கள். இப்போராட்டத்தில் கொல்ல வந்த நபர் அல்லது போலீஸ்காரர் உயிரிழக்க நேரிடும். சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் யாரும் பலியாகவே இல்லை.” என்றார்.

யோகி ஆதித்யநாத்தின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply