முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பரிசோதனை!

161

சென்னை (14 ஜூலை 2020): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 13.07.2020 இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  முன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

மேலும் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.