கூடு விட்டு கூடு பாயும் கொரோனா – சென்னையிலிருந்து வெளியேறியவர்களால் விபரீதம்!

Share this News:

சென்னை (22 ஜூன் 2020): சென்னையை விட்டு பொதுமக்கள் அவரவர் ஊர்களுக்கு சென்றதால் தமிழகமெங்கும் கொரோனா அதிரடியாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பும், பலியானவர்கள் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் தினம் தினம் புதுப்புது உச்சங்களை எட்டி வருகிறது.

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜுன் 19ஆம் தேதி முதல் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதையடுத்து பல்லாயிரம் மக்கள் சென்னையை விட்டு புறப்பட்டு சொந்த ஊர் வர தொடங்கினர். இபாஸ் வாங்கியும் இ பாஸ் இல்லாமலும் பலர் மற்ற மாவட்டங்களுக்கு பாய்ந்தோடினர்.

இதன் விளைவாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெறும் ஆறு நாளில் 17ஆயிரம் பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இந்த ஆறு நாளில் சுமார் 300 பேர் இறந்துள்ளார்கள்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 41,172 பேரும், செங்கல்பட்டில் 3,745 பேரும், திருவள்ளூரில் 1922 பேரும், திருவள்ளூரில் 2534 பேரும், காஞ்சிபுரத்தில் 1159 பேரும், திருவண்ணாமலையில் 1060 பேரும், கடலூரில் 765 பேரும், மதுரையில் 705 பேரும், திருநெல்வேலியில் 640 பேரும், தூத்துக்குடியில் 577 பேரும், விழுப்புரத்தில் 581 பேரும், ராணிப்பேட்டையில் 470 பேரும், சேலத்தில் 335 பேரும், அரியலூரில் 420 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Share this News: