கோவிட் தன்னார்வப் பணியாளர்களுக்கு கவுரவம் – நினைவு மலர் வெளியீட்டு விழா!

Share this News:

ரியாத் (03 ஏப் 2021): சவூதி அரேபியாவில் கடந்த ஆண்டு கோவிட்-19 நோய் தொற்று காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்காகவும், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்காகவும் தொண்டாற்றிய எண்ணற்ற சமூக பணி ஊழியர்கள், அரசு பணியாளர்கள், மருத்துவர்கள் என அனைவரையும் கெளரவிக்கும் வகையில் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரம், சவுதி அரேபியா சார்பாக “The Distance” நூல் வெளியீட்டு விழா கடந்த 28 மார்ச் 2021 அன்று ரியாத்திலுள்ள இந்திய தூதரக வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்திய தூதரகத்தின் துணை ஆணையர் (DEPUTY CHIEF OF MISSION) திரு. ராம் பிரசாத் அவர்கள் முதல் பிரதியை வெளியிட இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரத்தின் ரியாத் மாகாண தலைவர் பஷீர் இங்காபுழா அதனை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ரியாத் மாகாண செயலாளர் முகமது ரமுஜுதீன், டெல்லி பிரிவு தலைவர் ஜாவித் பாஷா மற்றும் சமூகநலப்பிரிவு பொறுப்பாளர் முனீப் பாளூர் ஆகியோர் உடனிருந்தனர்.


Share this News:

Leave a Reply