ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்கவேண்டும் – திமுகவினர் ஆர்வம்!

180

சென்னை (15 அக் 2020): ரஜினி தேர்தலுக்கு முன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று திமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுமே தயாராகிவிட்டன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன.

சசிகலா விடுதலையானால், என்ன நடக்கும் என்ற பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை தொடங்கி களத்திற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பும் தொற்றிக்கொண்டுதான் இருக்கிறது. மக்களிடம் எழுச்சி அலை உருவாகும்போது கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவேன் என்று சில மாதங்களுக்கு முன் ரஜினி தெரிவித்திருந்தார் .

இதைப் படிச்சீங்களா?:  உதய சூரியன் ஒழிக - அண்ணா அறிவாலயத்தில் கோஷம்!

இந்நிலையில் ‘ரஜினி கட்சி தொடங்கினால் திமுகவிற்கு ஆபத்து’ என்பதாக ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன. போதாதற்கு ‘இப்போதைக்கு கட்சி தொடங்க வேண்டாம்’ என ரஜினியிடம் திமுக கோரிக்கை வைப்பதாகவும் பாஜகவினர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

இது இப்படியிருக்க ரஜினி கட்சி தொடங்கினால் திமுக வாக்குகள் சிதற வாய்ப்பில்லை என்பதாகவும், ஏற்கனவே பாஜகவை ஆதரிக்கும் ரஜினி ரசிகர்களே ரஜினிக்கும் வாக்களிக்கக் கூடும் என்பதால் ரஜினி கட்சி தொடங்கினால், பாஜகவிற்கு விழும் வாக்குகளும் ரஜினிக்கு விழலாம் என்பதால் ரஜினி விரைவில் கட்சி தொடங்க வேண்டும் என்பதாக திமுகவினர் விரும்புகின்றனர்.