திமுக எம்.எல்.ஏ மரணம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!

150

சென்னை (10 ஜூன் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெ.அன்பழகன் இறந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  சாலையில் உலா வரும் மாடுகள் - விபத்தில் சிக்கும் வாகனங்கள்

ஜெ.அன்பழகனின் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த இயக்கத்திற்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.