அரசை கேள்வி கேட்க யாரும் இல்லையா? டெல்லி அரச அடக்குமுறைக்கு எதிராக குமுறும் மாணவர்கள்!

Share this News:

புதுடெல்லி (10 பிப் 2020): “எங்கள் மீது அத்துமீறும் போலீசையும் அரசையும் கேள்வி கேட்க நாட்டில் யாரும் இல்லையா?” என்று கொந்தளிக்கின்றனர். டெல்லி மாணவர்கள்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் போராடும் மாணவர்களை போலீஸார் கொடூரமாக தாக்கும் படலம் தொடர்கிறது. டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டனர்..

ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாக பேரணி மேற்கொண்டனர். அப்போது போலீசார் மேற்கொண்ட கொடூர தாக்குதலில் மாணவிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக 10 மாணவிகள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஒரு மாணவி தெரிவிக்கையில், போலீசார் பெண்களின் மறைவிடங்களை குறி வைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதில் 10 மாணவிகளின் நிலை மிக மோசமாக உள்ளதால் ஜாமியா மருத்துவமனையிலிருந்து அல் ஷிஃபா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த போலீஸ் தாக்குதலில் படுகாயம் அடைந்த ஒரு மாணவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

உடகங்களில் இச்செய்தி வந்துவிடக்கூடாது என்பதில் போலீசும் அரசும் தெளிவாகவே உள்ளன. அதனாலேயே இன்றைய செய்தி எந்த ஊடகங்களிலும் ஹைலைட் செய்யப்படவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் வீடியோக்களும் புகைப்படங்களும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

போராட்டத்தை கட்டுப்படுத்த எத்தனையோ வழிகள் இருக்க போலீசார் கொடூர தாக்குதலை தேர்ந்தெடுத்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, சர்வாதிகாரத்தின் செயலாகக் கூட கருதப்படுகிறது. .


Share this News:

Leave a Reply