திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்!

Share this News:

சென்னை (07 பிப் 2020): அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுகவில் இணைகிறார்.

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 96-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து விலகி கடந்த 2000-ம் ஆண்டில் ’மக்கள் தமிழ் தேசம்’ எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். பின்னர், 2006-ம் ஆண்டு தி.மு.க.வில் தனது கட்சியை இணைத்தார். இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ல் மீண்டும் அ.தி.மு.க.விற்கு திரும்பினார்.

மீண்டும் அ.தி.மு.க.வினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜ கண்ணப்பன் சிறிது காலம் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். தற்போது அவர் தி.மு.க.வில் இணைய திட்டமிட்டுள்ளார்.

மதுரையில் வரும் 23-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைகிறார். இந்த இணைப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


Share this News:

Leave a Reply