கொரோனா காலத்தில் தினமும் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கி வரும் காஜா பாய் டிபன் கடை!

Share this News:

சென்னை (26 மே 2020): கொரோனா காலத்தில் சென்னை திருவல்லிக்கேணி காஜாபாய் பிரியாணி கடையில் தினமும் 1000 ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கி வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை மிகவும் எளிமையாக தங்களின் வீடுகளிலேயே நேற்று கொண்டாடினார்கள்.

கொரானா வைரஸ் பரவல் காரணமாக பொதுப்போக்குவரத்து, பொது வழிபாட்டு தலங்கள் பிரார்த்தனைகள் ஆகியவற்றிற்கு தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மசூதிகளில் கூட்டம் ஏதும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்திருக்கிறது காஜா பாய் டிபன் கடை. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த கடை, கொரோனா காலத்தில் தினமும் ஆயிரம் நபர்களுக்கு உணவு தயாரிக்கிறது. அந்த உணவை சென்னை மாநகராட்சி மூலம் ஏழை எளிய மக்களுக்கு அளித்துவருகிறது

இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று 200 ஏழைகளுக்கு பிரியாணி செய்து தந்தது பெரும் வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது. ரம்ஜானை தொடர்ந்து நேற்று கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சமையல்காரர்களை வைத்து 200 பேருக்கு தேவையான சிக்கன் பிரியாணியை தயாரித்து வழங்கியுள்ளது.

சாலையில் வசிக்கும் வயதானவர்கள், ஏழைகள் கைவிடப்பட்டவர்கள் ஆகியோருக்கு அளித்ததாக கடையின் உரிமையாளர் நூருதீன் கூறியுள்ளார்.


Share this News: