நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் இலவச ஹோமியோபதி மருந்து மேலக்காவேரியில் விநியோகம்!

Share this News:

கும்பகோணம் (20 ஜூலை 2020):மேலக்காவேரி முகையத்தீன் ஆண்டவர் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் மேலக்காவேரி மிஸ்வா தன்னார்வலர்கள் இணைந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்து ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரைகளை 2,500 குடும்பங்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் நிகழ்வு திங்கள் கிழமை காலை 11.00 மணி அளவில் தொடங்கியது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலைத் தடுக்கும் வகையில் இன்று மேலக்காவேரி ஜாமியா பள்ளிவாசல் சமுதாய கூடத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து மேலக்காவேரி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக தலைவர் ஹிதாயத்துல்லாஹ் தலைமையில், மிஸ்வா தன்னார்வ அமைப்பின் தலைவர் மு.அப்துல் அஜிஸ் வரவேற்புரையுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில், ‘பள்ளிவாசல் தலைமை இமாம் ஜாபர் சாதிக் கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் நமது பாரம்பரிய மருந்துகள் மிகச் சிறந்த பலனளிப்பது குறித்தும், உணவே மருந்தாக பயன்படுத்தும் பாரம்பரிய முறையப் பற்றியும் விளக்கினார்.

மேலும் மத்திய, மாநில, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலையும் நாம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் மிஸ்வாவின் கள பணியாளர்களின் அயராத சேவை குறித்து எடுத்துரைத்து, இளைஞர்கள் மனிதநேயப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என்றும் சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில், மேலக்காவேரி மிஸ்வா அமைப்பு மற்றும் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ஜமாத்தார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை கவிஞர் அயூப்கான் தொகுத்து வழங்க, முகமது யூனுஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

ஆட்டோ மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்துடன் மிஸ்வா தன்னார்வலர்கள் ஹோமியோபதி மருந்து ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரைகளை இல்லந்தோறும் இலவசமாக விநியோகித்தனர்.


Share this News:

Leave a Reply