13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெரியப்பா கைது!

சென்னை (29 ஜூன் 2021): 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, சிறுமியின் பெரியப்பா சென்னையில் கைது செய்யப் பட்டுள்ளார்.

தாய், தந்தையை இழந்த 13 வயது சிறுமி சென்னை வேப்பேரியில் தனது சித்தி வீட்டில் தங்கிருந்து எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

சமீபத்தில் திடீரென சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் சித்தி.

மருத்துவப் பரிசோதனையில் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்தி, சிறுமியிடம் விசாரித்தபோது அவர் எதுவும் சொல்லாமல் அழுதிருக்கிறார்.

இதையடுத்து வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் சித்தி.

மகளிர் போலீசார் துருவித் துருவி விசாரித்ததில், பெரியப்பா உறவு முறை கொண்ட விஸ்வநாதன் என்பவர் தனக்கு ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததைச் சொல்லி இருக்கிறார்.

ஓட்டேரி பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், தனது கடைக்கு சிறுமியை மிரட்டி அடிக்கடி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இப்படி கடந்த ஒரு வருடமாகச் செய்து வந்திருக்கிறார்.

இதையடுத்து விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஹாட் நியூஸ்:

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...