ஆன்லைன் – காதல் – தற்கொலை ஹெச்,ராஜா கருத்து!

மதுரை (15 செப் 2020): ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலை நடப்பதாக குறை கூறினால் காதலாலும் தான் தற்கொலை நடக்கிறது என்பதற்காக காதல் செய்வதை தடை செய்ய முடியுமா என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலை நடப்பதாக குறை கூறினால் காதலாலும் தான் தற்கொலை நடக்கிறது என்பதற்காக காதல் செய்வதை தடை செய்ய முடியுமா?

பைகளில் இலவச பொருட்களை வாங்கியவர்கள், மோடியால் மூட்டையில் வாங்கி செல்வதாக மக்கள் கூறுகின்றனர். மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி நிச்சயம் கிடைக்கும் என்றும் மத்திய அரசு நடத்திய காவிரி மேலாண்மை குழு கூட்டத்தின் முடிவால் தான் காவிரியில் நீர் ஓடுகிறது மழையால் அல்ல.

திருப்பதி கோவில் சொத்துகள் குறித்த தணிக்கைக்கு நீதிமன்றம் தீர்ப்பையடுத்து ஆந்திரா இந்து அறநிலையத்துறை ஒத்துகொண்டுள்ளனர். இதேபோல் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் ஆண்டு வருமானம் 10லட்சத்திற்கு அதிகமாக உள்ள கோவில்களின் சொத்துகள் மற்றும் வருமானத்தை தணிக்கை செய்ய வேண்டும்..

லடாக்கில் சீனாவோடு யுத்த சூழல் நிலவும் நிலையிலும் கூட மக்களுக்கு மோடி அரசு உதவி வருகிறது. சீன நாடு உலகத்தின் அழிவாக உருவாகியுள்ளது..

ரஜினி ஆளுமையான ஆள் என்பதால் அவர் பாஜகவில் சேர்வது குறித்து நான் கருத்துகூற முடியாது ‘என தெரிவித்தார்.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...