தமிழக பாஜக தலைவராகும் எச்.ராஜா?

Share this News:

சென்னை (18 ஜன 2020): தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தமது தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா கவர்னரான பிறகு தமிழக பாஜக தலைவர் பதவிக்கு புதியவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. 11, 12 பேர் கொண்ட பட்டியல் டெல்லி மேலிடத்துக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

பொன் ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா, சி.பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஏ.பி. முருகானந்தம் என ஹேஸ்யங்கள் வெளிவந்தன. ஆனால் இவர் தான் தமிழக தலைவர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் முக்கிய தலைவரான முரளிதர ராவ் 10 நாட்களில் தமிழக பாஜக தலைவர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று உறுதி தந்தார்.

இது இப்படி இருக்க, எஸ்வி சேகர், ஹெச் ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். இதனால் எச்.ராஜாதான் தமிழக பாஜக தலைவர் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply