சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக்கில் நடைபெற்ற நெகிழ வைக்கும் நிகழ்ச்சி!

சென்னை (26 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை (ஷஹீன் பாக்) போராட்டக் களத்தில் இந்து பெண் ஒருவருக்கு முஸ்லிம் பெண்கள் சீமந்தம் நடத்தி அழகு பார்த்தனர்.

குடியுாிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் சிஏஏ வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர கோரியும், குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற கோரியும் சென்னை வண்ணாரப்பேடையில் பெண்கள் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சமூகத்தினரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தின் 13 வது நாளான இன்று போராட்டம் நடைபெறும் மேடையிலேயே இந்து மதத்தைச் சார்ந்த பாக்கியலட்சுமி என்ற கர்பிணி பெண்ணிற்கு இந்து முறைப்படியே சீமந்த விழா நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய பெண்கள், பாக்கியலட்சுமிக்கு வளையல் அணிவித்தும், அக்ட்சதை தூவியும் ஆசிர்வதித்து மகிழ்ந்தனர். மேலும், சீமந்த விழாவில் வழங்கப்பட்ட தாம்பூலப் பையில் “இஸ்லாமியர்கள் அனைவரும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளே” என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது அனைவரையும் நெகிழச்செய்தது.

ஏற்கனவே இதே மேடையில் திருமணம் ஒன்றும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...