நுங்கு, குலோப் ஜாமுன் – சர்ச்சை மருத்துவர் ஷர்மிகா மீது நடவடிக்கை?

சென்னை (25 ஜன 2023): சர்ச்சைக்குரிய மருத்துவக் கருத்துக்கள் தொடர்பாக சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தினர். இதன் பின்னர், சித்த மருத்துவ இயக்குனர் கணேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: “சித்த மருத்துவ கவுன்சில் அழைப்பாணையை ஏற்று இன்று ஷர்மிகா வருகைத்தந்திருக்கிறார்கள். பலர் ஷர்மிகா மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் நகலை அவருக்கு கொடுத்துள்ளோம். அவற்றை அவர் படித்து எழுத்துபூர்வமாக பதிலளிப்பதாக கூறியிருக்கிறார்.

இதற்கான விளக்கத்தை பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். அவரது பதிலை நிபுணர் குழுவின் கருத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து, இந்த வழக்கிற்கு உரிய நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளோம்.

நுங்கு சாப்பிடுவது மற்றும் புற்றுநோய் குறித்து ஷர்மிகா கூறிய சர்ச்சைக்குரிய தகவல்களைக் குறித்து அவர்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது”, என்று தெரிவித்தார்.

ஹாட் நியூஸ்: