ஊடகங்களின் செய்தியை பார்த்து பதற்றம் அடைய வேண்டாம் – ஜவாஹிருல்லா கோரிக்கை!

சென்னை (08 ஏப் 2020): மரணித்த முஸ்லிமின் உடலை எரியூட்டப்படும் என்ற தவறான செய்தியை வெளியிட்ட கலெக்டரின் உத்தரவை பார்த்து முஸ்லிம்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “கோவிட் 19 (கொரோனா வைரஸ்) பாதிப்பால் வேலூரில் 45 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் நபர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை எரியூட்டப்படும் என்று மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதனை பார்த்து பலரும் பதற்றத்துடன் கேள்வி கேட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் கோவிட் 19 ஆல் இறக்கும் ஒவ்வொருவரின் உடலையும் அவரவர் மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த இறுதி சடங்கில் எத்தனை பேர் கலந்து கொள்ள வேண்டும்? எவ்வாறு அடக்கம் செய்யப்பட வேண்டும்? இறுதிச் சடங்கில் கலந்து கொள்பவர்களுக்கான பாதுகாப்பு வகைகள் என்ன? போன்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இவ்விவகாரத்தை தமிழக அரசின் கவனத்திற்கு ஏற்கனவே எடுத்துச் சென்றுள்ளோம். அரசும் ஏற்று ‘கோவிட் 19’ ஆல் மரணிக்கும் முஸ்லிம்கள் உடலை முஸ்லிம்கள் முறைப்படி அடக்கம் செய்ய அரசு உத்தரவிட்டு எஸ்.ஓ.பி வெளியிட்டுள்ளனர். அதன்படியே வேலூர் முஸ்லிமின் உடலும் அடக்கம் செய்யப்படும். இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மாவட்ட தமுமுக தலைவர் இஜாஸ் அஹமதுவுக்கும் தெரிவித்துள்ளனர். எனவே ஊடகங்களில் மாவட்ட ஆட்சியர் கூறிய தகவலை பார்த்து யாரும் பதற்றப்பட வேண்டாம்” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்:

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...