ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க ஜவாஹிருல்லா கோரிக்கை!

Share this News:

சென்னை (08 ஜூலை 2020): “ஈரானில் சிக்கியுள்ள 44 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரான் நாட்டிலிருந்து சமுத்திர சேது என்ற திட்டத்தின் மூலம் இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் ஜலஸ்வாA என்ற கப்பல் மூலம் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் உட்பட 687 இந்தியர்கள் 01.07.2020 அன்று காலை தூத்துக்குடி புதிய துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கு தாயகம் திரும்பிய 687 இந்திய தொழிலாளர்களுக்கும் கொரானா நோய் தொற்று தொடர்பாக முதல்கட்ட மருத்துவ சோதனைகளுக்கு பின் அரசு பேருந்தின் மூலம் சொந்த மாவட்டங்களுக்கு அழைத்து சென்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மீட்பு கப்பலில் இட பற்றாகுறை என்ற காரணத்தினால் 44 தமிழக மீனவர்கள் பயணம் மேற்கொள்ள முடியாமல் ஈரான் நாட்டிலேயே உள்ளனர்,

கப்பலில் பயணம் செய்ய முடியாத தமிழக மீனவர்கள் எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாமலும் , கடந்த 5 மாதங்களுக்கு மேல் தொழில் செய்ய முடியாத காரணத்தாலும் அவர்களிடம் அத்தியாவசிய தேவைகளுக்கே மிகவும் அல்லல் படும் நிலையில் தள்ளப்பட்டனர்.

எனவே இந்திய தூதரகம் உடனடியாக தமிழக மீனவர்களின் அடிப்படை வசதிகளை மற்றும் தங்குவதற்ககான இடத்தினை உறுதி செய்வதோடு, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக 44 தமிழக மீனவர்களை மீட்டு நாட்டிற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News: